மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
காசுக்கு ஆசைப்படாத
காந்தியை
காகித பணத்தில்
கச்சிதமாய் அச்சில்!
பதவிக்கு
ஆசைப்படாத
காந்திக்கு
உயர்பதவியான
”மகாத்மா”
சுதந்திரம்
பெற்று தந்தவரை
சுதந்திரமாயும்
காற்றோட்டமாயும்
சிலை வடிவாய்!
அங்காங்கே!
சுதந்திரம். சுதந்திரமாய்
இருக்கிறதே!
அது போதும்!
- கே. அசோகன்.