இருபதிலும் அறுபதிலும்
இருபதிலும்..ஆறுபதிலும்
இறுமாப்போடு எகிறுவான் இருபதில்
அறுபதிலோ அடங்கி அமைதியாவான்!
மீசையை திருத்துவான் இருபதில்!
ஆசையைத் திருத்துவான்! அறுபதில்
பெண்ணின் பின்போவான் இருபதில்!
பெண்ணுக்கு துணையாவான் அறுபதில்!
இணைக்காக ஏங்குவாள் இருபதில்
துணையாய் இருப்பாள் அறுபதில்!
ஆசையாய் தேடுவாள் இருபதில்!
ஆளுமைத் தேடுவாள் அறுபதில்!
ஆணின்பின் போவாள் இருபதில்!
அரவணைப்பாள் ஆணை அறுபதில்
இருபதிலும்…அறுபதிலுமாக… ஆண்…பெண்..!
இதெல்லாம் இயல்பாய் நடக்கிறதே!
--- கே. அசோகன்.