அன்பு

அன்பு...

ஆயிரம் உணர்வுகள்.
ஆயிரம் உறவுகள்..
தருவது அன்பென்னும் ஒன்று!

அதை அடைந்திடத் தானே ஆயுள் முழுதும்
அலைந்திடும் மனமிங்கு உண்டு!

உனக்கென நானும், எனக்கென நீயும்
வாழ்வதின் பெயர் தான் அன்பு

அது
காயம் ஆற்றி மாயம் செய்யும்
கண்களின் வழியே கருணை தோன்றும்!

உலகில் யாவரும் அன்பைப் போற்ற,
வெறுப்பும் வெறியும் விலகிப் போகும்.
அன்பாய் வாழ கற்றோமானால்,
போர்களின் ஆயுதம் பூக்களாய் மாறும்!

கோபம் கொண்டு சண்டைப் போட்டே
நாளும் வாழ்வை கழித்தோம்!
இனி அன்பைக் காட்டி, அமைதிப் போற்றி,
நித்தம் நித்தம் ரசிப்போம்!


தாயின் பாசம், தந்தையின் பாடம்,
காதலி முத்தம் , குழந்தையின் சிரிப்பு,
இத்தனை சுகங்கள் மண்ணில் கிடைக்க,
சொர்கம் எதற்கு? சொந்தம் இருக்க!!

எழுதியவர் : நேதாஜி (15-Dec-15, 9:34 pm)
Tanglish : anbu
பார்வை : 317

மேலே