வாழ்க்கை
என்னாச்சு! ஏன் இப்படி இருக்கிறாய்? சொல்லித்தான் தொலையேன்....
என்ன சொல்ல மனசே சரியில்லை...
ஏன் என்னாச்சு
கோவம் ஆத்திரம் அழுகை எல்லாம் ஒன்னா வருது.. நான் என்ன பண்ண...
எதுக்கு இப்படி?
எல்லாம் வெறுமையாக இருக்கு. எல்லாம் வெறுப்பாக இருக்கு.
என்ன நடந்துச்சு சொல்லி தொல...
வழக்கம் போல் எல்லாம் கிண்டல் கேலி...
கருப்பு கருப்பு என்று வெறுப்புடன் பேசுகிறார்கள்.. கருப்பாக பிறந்தது என் குற்றமா? என்ன பண்றதுன்னு தெரியல... சாகலாம்னு இருக்கு...
லூசு லூசு மாரி பேசாத
பின்ன
பின்ன எப்படி பேச, பிறந்ததுல இருந்தே கருப்பு கருப்புனு கேலி, வளர வளர இன்னும் மோசமாக கிண்டல்...
கருப்பா இருக்குறதால குறை சொல்றாங்க, இதுக்கு என்ன பண்ண சொல்ற!
அதுக்குன்னு சாகபோரியோ!
எத்தன நாள்தான் எதிர்துகிட்டே கிடக்கிறது... ஒரு படத்துல கூட ஹீரோயின் கருப்பா இருக்காங்களா? எல்லாம் வெளுப்பா இருகுறவங்களதான் பிடிகிது... வெளுபா இருந்தா எந்த கேரக்டர் நாளும் ஓகே வா பாக்குறாங்க. அதே கருத்த பொண்ணு வந்தா அமைதியா இருக்குற பொண்ணா காமிகாங்க, கூட இருக்குறவங்க நமல வச்சி அவங்க கலரா இருகோம்னு காட்ட கூட நம்மள வச்சிருக்காங்க, உலகமே கருப்புனா ஏதோ ஒரு வெறுப்ப சிந்துறாங்க,
இப்ப கூட என் புருசன் ஆபீஸ்ல வேலை பாக்குற பொண்ணு வெள்ளையா அழகா இருகாளாம் அவ அழக அப்படி வர்ணிக்கிறார், என்ன ஒரு நாள் கூட அப்படி சொல்லல,, எத்தன நாள் தான் இப்படி சகிச்சிடே போறது...
கருப்பா ஒரு குழந்தை வெள்ளையா ஒரு குழந்தை இருந்தா கூட வெள்ளையா இருக்குற குழந்தை மேலதான் எல்லாருக்கும் தூக்கி கொஞ்சனும்னு ஆசை வருது... எத்தன காலம் மறுநாளும் இது மட்டும் இன்னும் இருந்துடே இருகுலா?
கறுப்பி, கருவாச்சி,இன்னும் எத்தன பேரு ஆனால் வெள்ளையா இருந்தா அழகி பேரழகி,,, மாறவே முடியதுலா!!!
விடு எல்லாம் மாறும், இப்ப எதுவும் யோசிக்காத போய் வேலைய பாரு,,
இன்னும் கொஞ்ச நேரம் இருந்துடு போரெனே...
சரி அப்ப கஷ்டத சொல்லி முடி மனசு லேசா இருக்கும்.
இன்னும் என்னடி பாத்ரூம் குள்ள பண்ற வெளிய வந்து வேலைய பாரு டைம் ஆகுது ஆபீஸ்க்கு நேரம் ஆச்சி....
- முத்து துரை