உன்னில் நான்

உன் இருவரி இடையினில்
இதழ்களின் வளைவினில்
இருப்பதெல்லாம் யார்?
நான்! நான்! நான்!
உன் வல்லின மெய்யினில்
வாலிபத் திமிரினில்
வாழ்வதெல்லாம் யார்?
நான்! நான்! நான்!
தென்றல் தீண்டிப் போகும்
பசு நாற்றாய் கவிழும்
உன் விழிகள்!
ஒரு நொடி பாட
ஆறா? நூறா?
இல்லை மொழிகள்!
நெஞ்சில் கொஞ்சிப்
போகிடும்
மிஞ்சியின் புலரலில்
என் லயங்கள்...
பேசாமல் பேசிடும்
பார்வைகள் எட்டா
அதிசயங்கள்!
பொய்மான் வேட்டையில்
மரித்தே போனது
மழலை மொழியினில்
ஒரு சிணுங்கல்...
உன் கைவரி ரேகையில்
கைவளைச் சாயலில்
உள்ளதெல்லாம் யார்?
நான்! நான்! நான்!
நீ உறிஞ்சிடும்
கோப்பையில்
முறித்திடும் சோம்பலில்
உறங்குதடி என் காதல்!
பார்வைகள் தெரிந்துமே
பரவசமடைந்திட
பாவையின் வடிவினில்
சிறு மோதல்!
கனவின் வாசலில்
கூவிய பூங்குயில்
சாயலில் நீ! நீ!
மறவேனே!
உன்
மைவிழிப் பார்வைகள்
மௌனத்தின் தீண்டல்கள்
புரிந்திட புதிதாய்
பிறப்பேனே!!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (28-Jun-16, 12:23 pm)
Tanglish : unnil naan
பார்வை : 576

மேலே