முள்ளில் தைத்த இதயம் --- முஹம்மத் ஸர்பான்

என் கண்ணீரோடு பேசுகிறேன்
சமாதிகளின் காணிக்கையில்
இரு சிலுவைகள் வாங்குகிறேன்
மரணப் புத்தகம் வாசிக்கிறேன்
யுகப் பூக்களிடம் கையேந்தி
ஒரு பாடையைக் கேட்கிறேன்
சிறு மின்மினியின் கடிதங்கள்
என்னவளின் சுவாசங்களில்
என் ஆத்மாவாய் பிறக்கின்றது
இருள்மயமான குருட்டு வானம்
என் கனவுகளின் கப்பலை
அருவிகளில் போட்டுப் போனது
குப்பை போல் கனாக்கள்
வயது முதிர்ந்த குகைகளில்
காற்றை தேடி அலைகிறது
கண்கள் எனது கைக்குட்டை
போலியான நியாபகங்களை
பொக்கிஷமாய் முத்தமிடும்
என் காதல் பேருந்து வந்தது
நீர் வீ ழ்ச்சி போல் இதமான
கவிதைகள் தந்து போனது
இதயத்தை நீ தரிசாக்கி
மீத்தேன் தயாரிக்கிறாய்
நான் உக்கிப் போகிறேன்
வறுமையான என் காதல்
கைக்குழந்தையை போல
உன் நிழலில் வசிக்கின்றது
பாழடைந்த புல்லாங்குழல்
என் சுவாசத்தை அள்ளி
அவளின் ஆயுளில் ஊற்றும்
விலா என்பை தேடுகிறேன்
கனாக்களின் விறகாய்
எரிந்து மெலிந்து போனது
அவள் அழுகை தந்தாள்
சமுத்திரம் காயும் வரை
நானும் காத்திருந்தேன்
இன்று மரணம் தந்தாள்
மறு வார்த்தை பேசாமல்
முற்றுப் புள்ளியாகிறேன் நான்
முள்ளில் தைத்த ஓரிதயமாய்!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (27-Jan-18, 10:01 am)
பார்வை : 303

மேலே