வேறென்ன இனி வேண்டும்

இதழோடு இதழ் சேர்த்து
புது வேகம் நீ ஏற்று!
விரலோடு விரல் கோர்த்து
சுக ராகம் நீ மீட்டு!
கடைவிழியின் கனிவுகளில்
நீள்காயம் நீ ஆற்று!
தவமிருந்த விடியலிதின்
வெள்ளியென வந்தவளே
அர்த்தசாம வேளையிலும்
அகலெனவே துலங்கவா!
வறண்டுவிட்ட
பாலையிதை
சோலையாக்கும்
புதுப்புனலே
கோடை இவன் காணாமல்
கார்க்குழலால்
போர்த்த வா!
நேற்றுவரை என் வானை
மூடி நின்ற பனி மூட்டம்
கதிரொளியாள்
உன் வரவால்
மழைக்குளிராய்
தேய்கிறதே!
கற்பாறை கோட்டையென
நான் செய்த ஓர் மனது
மகிழம்பூ இதழ்களென
உன் வழியில் உதிர்கிறதே!
சிற்றிடையின்
நளினம் போல்
சேர்த்து வைத்த
ஆசையெல்லாம் சொல்ல ஒரு மொழியின்றி கூறாமல் சாகிறதே!
வேறென்ன வரம்
வேண்டும்?
உன் விழி பேசும்
நொடி போதும்!
வேறென்ன சுகம்
வேண்டும்?
உன் விரல் கோர்க்கும்
வரம் போதும்!!!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (24-Nov-17, 2:44 pm)
Tanglish : veerenna ini vENtum
பார்வை : 153

மேலே