காதல் விதைகள்

மூவண்ண கொடியை
கருப்பு வெள்ளை
இரு வண்ணமாக்கி
இரு கண்ணில் காட்டியவளே

காரணம் இதுவோ
தேசப்பற்று கொண்ட நான்
உன் மீது
நேசப்பற்று கொள்ள

நீ
காஷ்மீர் சென்றால்
இமயம் குனிந்து பார்க்கும்
கண்ணியா குமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த கண்ணியா குமாரி என்று

அவள் எல்லையில்
நடந்தால் சேலையில்
தீவிரவாதமோ விறகாகும்
காதலெனும் சூளையில்

உன்னை
கண்டபின் தான்
தெரிந்தது
அன்னம் அழியவில்லை என்று

இனியவளே
நீ கடித்து துப்பிய
கரும்பு
எரும்புக்கு
விருந்து

நீ கடித்த மிளகாயை
குழம்பில் போடாதே
இனித்துவிடப் போகிறது

வள்ளுவரின்
ஒன்னரை அடி
நடையை விட
வள்ளி
உன்
ஒரு அடி
நடை எனக்கு
ஆயிரம் பொருளை விளக்குதடி
அவள் எத்தனைமுறை
சாதம் வடித்தாலும்
சக்கரைப் பொங்கல்
மட்டுமே வருகிறது

தென்றல்தானே அவளைத்தீண்டிய
காற்றெல்லாம்
தானே (புயல்) எப்படி உருவானது ?
அவளைத் தீண்ட முடியா காற்றுக்
கற்றைகளின் கடுமையான கோபமோ ?

கி மு , கி பி
என்றினி சரித்திரம் சொல்லாது
அ மு , அ பி
என்றே சொல்லும்
அவள் பிறப்பதற்கு முன்
அவள் பிறந்த பின்

கனவு மட்டுமே
காண்கிறேன்
அவளைக்கண்ட கணம்முதல்

அடகுக்கடைக்கு செல்வோரெல்லாம்
அழகு நிலையத்தில்
அவளைக் கண்ட கணம்முதல்

எழுதியவர் : குமார் (12-Jul-16, 6:57 pm)
Tanglish : kaadhal vithaikal
பார்வை : 272

மேலே