தமிழ் வேந்தன்
என் மனமே
காலத்தை முந்திக்கொண்டு
மறித்து யோசித்து சொல்லிவிடு!
கற்பனா சக்தி என்றே பெயர் வைத்துக்கொள் -பேசிவிடு மனமே!
"இதோ -
உன் நரை மனதின்
வயது 65 -கால சக்கரத்தின்
விபத்தில் தப்பிய இளம்கிழமே!
சொல்கிறேன் கேள்?
10 தலை ராவணனினும் மிஞ்சிய
உன் தலைகள் எத்தனை ?
கர்வம் கொள்ளாதே -
ஒரு மனதாய் உன் சிந்தனையில் தோன்றி நல்முடிவெடுப்பேன் -ஆனால் நீயோ வருவோர் போவோரிடம் யோசனை என்ற பேரில் எத்தனை தலைக்கொண்டு தோல்வியுற்றாய்!
ஒன்றை ஒப்புகொள்கிறேன்
பக்கிரிக்கு ஞானம் கிட்டியதுபோல் உனக்கு
உன் மனையாள்
65 வயது நரை மனதிலும் உயிர்மூச்சாய் ஒட்டிக்கொண்டாள் -பிள்ளை என்ற பாசம் தந்தாள்
நீ ராவணின் தலைகள் மிஞ்சி தோற்றபோதிலும் -அவள் நுனி விரலில் ஊக்கம் தந்தாள்
இதோ நரைகிழமே உன் அருகில் அவள் அமர்ந்து
இளம் என்ற வார்த்தையை அணைக்க சொல்லி திருத்தம் செய்கிறாள்!
ஏதோ இரண்டு மூன்று சாதனை செய்துவிட்டாய் என்று அவ்வப்போது இவ்வுலகம் வியந்தாலும் எனக்கு மட்டுமே தெரியும் அவளின் பினாமி நீ என்று!
இதோ இளம்கிழமே உனக்கு இன்று முக்கியமான நாள் -உன் அவளின் மாங்கல்ய மகத்துவத்தை உணரும் நாள்
உன் அருமை மகள்களின் மருத்துவ உலகம் வியக்கும் நாள் -
என் சிந்திக்கும் சக்திக்கு கற்பனா சக்தி உயிர்கொடுத்ததே
இருதயத்தில் கோளாறாம்
உயிர் பிரியுமாம் -நீ திரும்பி பின்நோக்கி 65வயது வாழ்க்கையை இரண்டு நிமிட காலக்கெடுவில் நினைவேந்துகிறாய் -அனைத்திலும் உன் அவளின் காதல்! காதல்!சாகாவரம் பெற்றது போல் நீ பிழைத்துகொண்டாய்!
இதோ இளம்கிழமே இம்முறையும் காலசக்கரத்தின் விபத்தில் தப்பிவித்தவள் -உன் கரம் பற்றி பேரனுக்கு பெயர் சூட்டுகிறாள் "தமிழ்வேந்தன்"
வாழ்த்துகிறேன் நீவிர் பல்லாண்டு வாழ்க!!
இப்படிக்கு,
நரைமனம் வயது 65 மன்னிக்கவும்
"இளமனம்" -இன்றையவயது 31,
மருதுபாண்டியன்.க