கடல் கடந்தது என் கவலை

மல்லிகை பூவை உன் தலையில் சூடி
உன் மடி மீது என்னை சாய்த்து...என்னை
உன் மயக்கத்தில் வைத்தாயடி..

என் உதடோடு உன் உதடை வைத்து
முத்தம் மழையில் என்னை நனைத்து
நித்தம் அன்போடு தந்தாயடி..

என் உடலுக்கு மட்டும் நீ
கரும்பாய்,கற்கண்டாய்,தேனாய்
சுவையாய் சுவைத்தாயடி..

நடு இரவில் நான் உறங்கி விட்டாலும் கூட
என்னை தட்டி எழுப்பி காமத்தின்
உச்சிக்கே அழைத்து செல்வாயடி..

எனக்கு பசிக்கும் போதெல்லாம்
ஊட்டி விட்டு என்னை உற்சாகத்தின்
உச்சிக்கே அழைத்து சென்றாயடி..

என் ஒவ்வொரு உணர்விலும்
நீ ஒரு தாரக மந்திரமாய்
காட்சி தந்தாயடி...என் இனிமையானவளே..

என்னை அயல் நாட்டிற்க்கு அனுப்பிவிட்டு
எதும் அனுபவிக்க முடியாமல் நான்
தவிப்பது யார் விட்ட சாபமடி?....

உண்மையை சொல்ல போனால்
உறகாமல் தவிக்கிறேன்..கடந்த கால
உறவை வைத்து நான் இங்கே. .

நீயும் அங்கே அப்படிதான் தவிப்பாய்
என்று என் உள்ளமும் உணர்வுகளும்
ஒன்றாய் உணர்த்துதடி..

பணம் சம்பாரிக்க பாசத்தை விட்டு
உணவு சம்பாரிக்க உறவை விட்டு
துடியாய் துடிப்பது நாம் இரு உள்ளம் தானடி...

கடல் கடந்து நான் இருந்தாலும். என்
கவனம் எல்லாம் உன் மீதும்
குழந்தைகள் மீதும் செல்லுதடி..

இதற்க்கு முற்றும் புள்ளி வைப்பது
யாரால் முடியும்மடி.. முடியும் வரை
கண்ணியமாய் இருந்து கொள்ளடி...

சீக்கிரம் வருவேன்..உன் சிந்தனை
சிதறாமல்.. சிறப்பாய் நாம் இருவரும்
மீண்டும் வாழ்வோமடி..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Sep-15, 2:03 pm)
பார்வை : 139

மேலே