அஞ்சலி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அஞ்சலி
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  02-Nov-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Sep-2014
பார்த்தவர்கள்:  420
புள்ளி:  88

என் படைப்புகள்
அஞ்சலி செய்திகள்
அஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2020 7:46 pm

முகம் அறியா பருவத்தில் முழுமதியாய் ஆனாயே.....
விரல் பிடித்து நடக்கயிலே விடை கொடுத்து போனாயே.....

அன்னையிடம் காட்டியதில்லை தந்தை இழப்பின் ஏக்கத்தை.....
அவளும் என்னிடம் காட்டியதில்லை உன் இழப்பின் சோகத்தை.....

காலனுக்கும் கருணை இல்லை கண்கொண்டும் பார்க்கவில்லை.....

கதைகளிலே படித்ததுண்டு மறுபிறவி..... மறுஜென்மம்.....

நான் கடவுளிடம் கேட்டதெல்லாம் ஒரு பிறவி உன்னோடு.....

கருணையில்லா இக்கடவுளுக்கு மாலை எதற்கு..... பூஜை எதற்கு.....

உன் உடல் சோர்வு உற்றபோது உணரும் வயதில் நான் இல்லை.....
உணரும் வயது வந்தபோது உடன் இருக்க நீ இல்லை.....

என்னுடன் இருக்கும் தோழிகள் அவரவர் தந்தைக்கு வாழ்த்து கூற...

மேலும்

அஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2019 3:10 pm

இன்று ஆண்களின் தினம் அல்ல
என் அவனின் தினம்......
அவனே என் முதல் ஆண்மகன்
என் பெண்மையை முழுதும் ஆல்பவன்.....
என் வெட்கத்தின் விளிம்பானவன்
சொர்க்கத்தின் சொந்தமானவன்.....
என் கோபத்தில் கொஞ்சலானவன்
நான் கொஞ்சும் போது
மிஞ்சுவான் இவன்.....
என் தேவைகளின் தேவையை பூர்த்தி செய்ய
வாய்மொழி தேவையில்லை என்று எனக்கு உணர்த்தியவன்.....
இன்று முப்பொழுதும் உன் கற்பனையே
என் மூச்சும் எனக்கு சொந்தம் இல்லையே.....
இப்படியே கற்பனையிலேயே 10 கல்யாணம் பண்ணி முடிக்க
ஆண் மகனோ பெண் மகளோ ஏதோ ஒன்று பிறந்திருக்க.....
உறவினர்கள் உன் சாயல் என்றுரைக்க.....
நான் எப்படி சொல்வேன் அவர்களிடம்......

நம் காதலின் சாயல் என்று.....

மேலும்

அஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2018 7:28 pm

இரவு நேர பணி முடித்து
அரைமணி நேரத்தில் என் அறை சேர்ந்து
உடைமாற்றி, ஜடை பூட்டி, ஒய்யாரம் பல பார்த்து

உனக்கே உரித்தான உதடு
உனை சேரும் வரை உலராமல் இருக்க
உதட்டுச்சாயம் சில பூசி

கடகடவென ஓடிவந்து காத்திருக்கும் உனைக்காண
தடதடவென மன ரயிலோ.....
என்னை முந்தி முந்தி செல்லுதடா.... மூச்சு வாங்கி கொல்லுதடா...

எடை குறைய எட்டெடுத்து
எட்டா தூரம் உன்னுடன் நடக்க

குட்டி குட்டி ஆசைகளும்
எட்டிப்பார்த்த ஏக்கங்களும்
கிட்டத்தட்ட கூடுதடா... மனம் குட்டிக்கரணம் போடுதுடா...

உடல் எடையோ குறைய குறைய
மன எடையோ நிறைய நிறைய
காலங்களும் கரையக் கரைய
என் உயிர் உன்னுடல் உறைய உறைய

மனம்பித்து பிடிக்க

மேலும்

அஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2018 12:06 pm

எனை இப்பூமியிலே பிரசவித்து
என் இன்ப துன்பங்களை உனதாக்கி
நான் சிரிக்கும்போது சிரித்து
நான் அழும்போது அழுது
எனதின்னொரு பிம்பமான என் தாய்க்கு
இதோ இந்த மகளின் சமர்ப்பணம்......................................................

கண்ணீர் காட்டில் பிறந்த தாயே
என்னை கண்கலங்க விடல நீயே...
கட்டுப்பாட்டில் வளர்ந்த தாயே
என்னை முத்து கொட்டி வளர்த்தாய் நீயே..

பெண்ணென நீயும் பிறந்ததும்
இந்த மண்ணுனை சபித்ததோ....
உந்தன் மன்னவன் விண்ணில் மறைந்ததும்
உந்தன் பெண்மையும் மறுத்ததோ.......

காலம் கடந்து செல்லும் யுகங்களா
அந்த கால தேவன் என்ன கற்கல்லா.....
வாழும் வாழ்க்கையும் மகள்களால்
உந்தன்

மேலும்

அஞ்சலி - பாஸ்கரன் இராமமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2018 3:52 pm

என் இதயத்திற்கும் ஏனோ வேர்க்கிறது

இமை கூட உன் முகம்
பார்க்கிறது

உன் ஒரு இதழ் முத்தம்தனை கேட்கிறது

கடல் பெரிதா நிலம் பெரிதா
எனைக் கேட்டால் நீதான் என்பேன்

கனவில் நீ வரும்போதெல்லாம் கடவுளிடம் இன்னும் கொஞ்சம் இரவல் கேட்கிறேன் இரவை

காலம் முன்னோக்கி நகர நான் மட்டும் பின்னோக்கிய செல்கிறேன் உன்னுடன் கழித்த என் இனிமையான பொழுதுகளை புதுப்பிக்க

இரவு வானை நிமிர்ந்து கொஞ்சம் பார் நட்சத்திரம் உனை பார்த்து கண் சிமிட்டும் என் கண்களாய்

மேலும்

கண்ணீர் கூட ஓவியன் தான் உன்னை நினைக்கும் போதெல்லாம் நிலவின் ஒளி எடுத்து உன் முகம் காட்டுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Feb-2018 6:04 pm
அஞ்சலி - பெ வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2018 3:36 pm

நிலவைக் காட்டி
நித்தமும் சோறு ஊட்டு....

நடுவிரல் பிடித்து
நடைபயில கற்றுக்கொடு....

என்விரல் பிடித்து
எழுதக் கற்றுக்கொடு....

இடையில் ஏந்திக்கொண்டு
எங்காவது கூட்டிச்செல்....

முகத்தில் முகம்புதைத்து
மூச்சடைக்க முத்தமிடு....

முந்தானை எடுத்து
முகத்தினை துடைத்துவிடு....

கண்களை கட்டிவிட்டு
ஓடிச்சென்று ஒளிந்துகொள்.....

குறும்புகள் செய்தாலும்
கொஞ்சம் பொறுத்துக்கொள்....

தோள்மீது சாய்த்து
கதைசொல்லி தூங்கவை...

இத்தனையும் செய்வாயா...?

இப்போதே
குழந்தையாகிறேன்......

மேலும்

அருமையான கவி தோழரே...... 05-Feb-2018 11:50 am
உங்கள கவிதையை படிக்கும் பொழுது மீண்டும் குழந்தையாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வரம். அருமை 05-Feb-2018 11:26 am
இன்னொரு அன்னையாய் அவள் அவன் வாழ்க்கையில் வரவாகிறாள் அது போல் முதற் குழந்தை போல் ஒரு பெண்ணும் ஆணின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2018 6:55 pm
அஞ்சலி - அஞ்சலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2018 9:03 pm

இது கண் பார்த்து பேசும் கண்ணிய உறவு
அந்த காலதேவனுக்கும் கிட்டாத புண்ணிய உணர்வு

இங்கு .....
சலனங்கள் இல்லை
சலிப்புகள் இல்லை
வெறுப்புகள் இல்லை
வெட்கத்திற்கு...... வேலையே இல்லை.........

மேலும்

ஆம் தோழா 31-Jan-2018 9:15 am
உண்மைதான் நட்பே..... நட்பில்லா வாழ்வு உப்பில்லா உணவை போன்று சிறப்பாகாது... 29-Jan-2018 9:27 pm
ம்ம்ம்ம் ஆம் தோழரே உங்கள் கருத்துக்கு நன்றி 28-Jan-2018 10:00 pm
உள்ளங்களின் தூய்மை ஒன்றே நட்புக்கு அவசியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jan-2018 9:34 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Nov-2014 8:49 pm

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய

மேலும்

உம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை!!! 10-Jul-2017 6:44 am
ஆழமான வார்த்தைகள் 02-Jul-2017 10:50 am
மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன். 22-Sep-2015 2:09 pm
அஞ்சலி - ஜெகன் பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2015 11:44 pm

வந்த காரணம் அறியாது என்ன ஏதென்று தெரியாது
கை கால்கள் அசையாது தலை கீழாக விழுந்தேன்
முயற்சி பண்ணுன்னு செவிலி சொன்னாள்

மண்டியிட்டு மண்ணை தொட்டேன்
குறும்புக்காரன் என குட்டு பட்டேன்
எம்பி எழுந்து நடந்து பார்த்தேன்
ஏழாவது அடியில் எகிறி விழுந்தேன்
முயற்சி பண்ணுன்னு அம்மா சொன்னாள்

கல்வி கருவென பள்ளி சேர்ந்தேன்
புத்தகம் படித்தே புழுவாகிப் போனேன்
தானாக தேர்வில் சிந்தித்து எழுதினேன்
ஆறாம் வகுப்பு மூன்றுமுறை படித்தேன்
முயற்சி பண்ணுன்னு வாத்தியார் சொன்னார்

அரும்பு மீசையை தினமும் வழித்தேன்
கன்னத்துப் பருக்களில் களிம்பு பூசினேன்
பக்கத்து கல்லூரி பாடம் படித்தேன்
முகத்தில் உமிழ்ந்த எச்சில

மேலும்

arumaiyana kavi vetri pera vaazhthukal thozhare 24-Nov-2015 2:33 pm
கவிதை அருமை !!! 21-Nov-2015 8:12 am
அருமை ஜெகன்... "சளித்த வாழ்வின் அர்த்தம் எதுவாயினும் - நாம் தொலைத்த வார்த்தை இதுதானோ?" "முயலாதே நண்பா "மகிழ்" " 18-Nov-2015 9:33 am
நன்றி... 18-Nov-2015 12:54 am
அஞ்சலி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 3:15 am

இதயத்திலே ஒரு செயற்கூட்டம்
நடத்துகிறேன் பனித் துளியாட்டம்
சிறப்புரைக்கு உன்னை அழைக்கின்றேன்
பூமரமே வந்து பேசிவிடு
சாமரம் நானும் வீசுகிறேன் ...(இதய)

என் கடலுக்குள்ளே மீன்கள் இல்லை
உன் கண்கள் ரெண்டை நீந்தவிடு
நிதம் கனவுக்குள்ளே பருவத் தொல்லை
இளம் காதல் நெஞ்சை வழங்கிவிடு
என் தோட்டப் பூவிலும் வாசம் இல்லை
சில நேரம் அங்கே உலவிவிடு
என் இரவுப் புத்தகத் தாளில்
நிலவுக் கவிதை நீயாக
உன் உறவுப் பெட்டகம் அதிலே
உறங்கும் ஒட்டகம் நானாக
கைப்பேசிக்குள் “சிம்” போல் நீயும் தங்கிவிடு
நான் அழைக்கும்போது செல்லச் சிணுங்கள் சிதறிவிடு (இதயத்திலே)

என் நந்த வனத்தில் தென்றல் இல்லை
நீ

மேலும்

நன்றி புனிதா 01-Apr-2015 2:04 am
மிகவும் அருமை அய்யா! 21-Sep-2014 5:34 pm
நன்றிகள் அஜீத் . 20-Sep-2014 1:35 am
கருத்துக்கு நன்றிகள் ஐயா. அடுத்தடுத்த முயற்சிகளில் உங்கள் கருத்தை கருத்தில் கொள்கிறேன் ஐயா. 20-Sep-2014 1:34 am
அஞ்சலி - அஞ்சலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2014 8:24 pm

ஈரெழுத்து காவியம் இவள்
என் மனத்தில் நான் மட்டும் ரகசியமாய் காதலிக்கும் காதலி இவள்
எழுதபடா சரித்திரம் இவள்
நான் எழுத எழுத எட்டாத எல்லை இவள்
இவள் என் அருகிருந்தால்
தோல்வி அது தொலைந்திருக்கும்
வெற்றி அது நெருங்கிருக்கும்!!!!!!!!!

மேலும்

ஆம் தோழரே மிக மிக நன்று 26-Sep-2014 6:19 pm
நன்றி தோழரே 26-Sep-2014 6:18 pm
ஈரெழுத்து காவியம் இவள் எழுதபடா சரித்திரம் இவள் .. அருமையான வரிகள். வாழ்த்துக்கள்!!! 22-Sep-2014 2:11 pm
அருமை நட்பே...... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... தாயைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம் அல்லவா.... வெகு விரைவில் நானும் எழுதுகிறேன்.... 16-Sep-2014 2:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (35)

krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (35)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சீனிவாசன்

சீனிவாசன்

சென்னை
மேலே