என் தாய்க்காக
எனை இப்பூமியிலே பிரசவித்து
என் இன்ப துன்பங்களை உனதாக்கி
நான் சிரிக்கும்போது சிரித்து
நான் அழும்போது அழுது
எனதின்னொரு பிம்பமான என் தாய்க்கு
இதோ இந்த மகளின் சமர்ப்பணம்......................................................
கண்ணீர் காட்டில் பிறந்த தாயே
என்னை கண்கலங்க விடல நீயே...
கட்டுப்பாட்டில் வளர்ந்த தாயே
என்னை முத்து கொட்டி வளர்த்தாய் நீயே..
பெண்ணென நீயும் பிறந்ததும்
இந்த மண்ணுனை சபித்ததோ....
உந்தன் மன்னவன் விண்ணில் மறைந்ததும்
உந்தன் பெண்மையும் மறுத்ததோ.......
காலம் கடந்து செல்லும் யுகங்களா
அந்த கால தேவன் என்ன கற்கல்லா.....
வாழும் வாழ்க்கையும் மகள்களால்
உந்தன் வாழ்வின் அர்த்தமும் அவள்களா.....
இளகிய மனம் உடையவள்
தினம் ஓய்வின்றி இவள் உழைப்பவள்....
பகைவனாய் ஒருவர் வந்தாலும்
உந்தன் பண்பிலே தினம் வெல்பவள்.....
சுற்றம் உன்னை ஏமாற்றலாம்
விதி சுற்றி சுற்றி உன்னை வாட்டலாம்....
பட்ட பாடெல்லாம் தொடரலாம்
உந்தன் பண்பு மட்டுமே மாறுமோ.....!