செய்த பிழையின் பரிசு
யார் செய்த பிழையோ
பாவத்தின் சம்பளமாக
பிறந்தது பச்சிளம் குழந்தை
பிழைத் திருத்த
தொட்டிலினில் இடுவார்
என்றால் இட்டதோ
குப்பைத் தொட்டியில்....!
தாலாட்டுக்கு இடையினில்
தூங்க வேண்டியவள்
நாய் நரிகளின் ஊளைகளுக்கு
விழித்துக் கொண்டிருக்கிறாள்.....!
தாய் மடி விரிப்பின் மீது
தாவழ வேண்டிய அவள்
குப்பை காதித விரிப்பினில்
உருண்டு தழந்திடுகிறாள்...!
அது பிஞ்சி நெஞ்சம் எனவும்
பாராமல் நஞ்சுக்
கொடி கூட அறுவாமல்
குப்பையினில் கொட்டிய
நஞ்சுள்ளம் கொண்டவரோ யாரோ...!

