நிறை மாத கர்ப்பிணியின் ஆசை

நீ வருவாய் என காத்திருக்கிறது என் நெஞ்சம்.
உன்னை காண ஆவலோடு காத்திருக்கிறது என் கண்கள்.
உன்னை கண்டதும் கட்டி அணைக்க துடிக்கிறது என் கைகள்.

உன் கன்னத்தில் முத்தமிட ஆசை.
உன் கன்னத்தோடு என் கன்னம் வைத்து உறங்க ஆசை.

உன் பேச்சை நான் ரசிக்க வேண்டும்.
உன் பேச்சில் மற்றவர்கள் மயங்க வேண்டும்.

உன் பேச்சுக்களோடு கழிய வேண்டும் என் இரவு.
உன் நினைவுகளோடு கழிய வேண்டும் என் பகல்.

அன்னம் தண்ணீர் ஏதும் தேவை இல்லை உன்னோடு இருந்தால்.
உனக்காக எதையும் விட்டு விடுவேன் உசுரை கூட.

இப்படிக்கு,
தமிழ் ரசிகன்...

எழுதியவர் : தமிழ் ரசிகன் (22-Feb-18, 4:06 pm)
பார்வை : 416

மேலே