மீண்டும் குழந்தையாகிறேன்

நிலவைக் காட்டி
நித்தமும் சோறு ஊட்டு....

நடுவிரல் பிடித்து
நடைபயில கற்றுக்கொடு....

என்விரல் பிடித்து
எழுதக் கற்றுக்கொடு....

இடையில் ஏந்திக்கொண்டு
எங்காவது கூட்டிச்செல்....

முகத்தில் முகம்புதைத்து
மூச்சடைக்க முத்தமிடு....

முந்தானை எடுத்து
முகத்தினை துடைத்துவிடு....

கண்களை கட்டிவிட்டு
ஓடிச்சென்று ஒளிந்துகொள்.....

குறும்புகள் செய்தாலும்
கொஞ்சம் பொறுத்துக்கொள்....

தோள்மீது சாய்த்து
கதைசொல்லி தூங்கவை...

இத்தனையும் செய்வாயா...?

இப்போதே
குழந்தையாகிறேன்......

எழுதியவர் : பெ வீரா (4-Feb-18, 3:36 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 516

மேலே