நீ எங்கே என் அன்பே

கடலில் சேர்ந்திடும் நதியினை-போலவே
உன்னை நானும் சேரவே
நான் இங்கே வாழ்கிறேன்
நதியாக நான் இங்கே
கடலாக நீ எங்கே
உன்னை நானும் தேடிடவே
என் ஆயுள் கரைந்திடுதே
நொடி பொழுதும் ஓடிடவே
நான் இங்கே மாய்கிறேன்
அணை செய்து பிரித்தாலும்
கண்ணீர் நதியினிலே
உன்னை நானும் சேருவேன்

எழுதியவர் : மு.பிரதீப் (4-Feb-18, 5:38 pm)
Tanglish : nee engae en annpae
பார்வை : 536

மேலே