மனம் பித்து பிடிக்குதடா
இரவு நேர பணி முடித்து
அரைமணி நேரத்தில் என் அறை சேர்ந்து
உடைமாற்றி, ஜடை பூட்டி, ஒய்யாரம் பல பார்த்து
உனக்கே உரித்தான உதடு
உனை சேரும் வரை உலராமல் இருக்க
உதட்டுச்சாயம் சில பூசி
கடகடவென ஓடிவந்து காத்திருக்கும் உனைக்காண
தடதடவென மன ரயிலோ.....
என்னை முந்தி முந்தி செல்லுதடா.... மூச்சு வாங்கி கொல்லுதடா...
எடை குறைய எட்டெடுத்து
எட்டா தூரம் உன்னுடன் நடக்க
குட்டி குட்டி ஆசைகளும்
எட்டிப்பார்த்த ஏக்கங்களும்
கிட்டத்தட்ட கூடுதடா... மனம் குட்டிக்கரணம் போடுதுடா...
உடல் எடையோ குறைய குறைய
மன எடையோ நிறைய நிறைய
காலங்களும் கரையக் கரைய
என் உயிர் உன்னுடல் உறைய உறைய
மனம்பித்து பிடிக்குதடா
அது தினம் செத்து பிழைக்குதடா.......