ஆதலினால் வார்த்தையில் வடித்தேன்

உன்னை ஓவியமாய்
எழுதி வைத்தேன் இதயத்தில்
விழிகளை இரு தாமரையாய்
மூடித்திறக்கும் அழகை அந்திவானமாய்
புன்னகையை மல்லிகைச் சரமாய்
உள்ளத்தின் உணர்வுகளை
எப்படி எழுதுவேன் ஓவியத்தில்
ஆதலினால்
வார்த்தையில் வடித்தேன் கவிதையாய்
இல்லை
காதலாய்......

எழுதியவர் : கவின் சாரலன் (21-Oct-18, 7:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே