இதயத்திலே ஒரு செயற்கூட்டம்
![](https://eluthu.com/images/loading.gif)
இதயத்திலே ஒரு செயற்கூட்டம்
நடத்துகிறேன் பனித் துளியாட்டம்
சிறப்புரைக்கு உன்னை அழைக்கின்றேன்
பூமரமே வந்து பேசிவிடு
சாமரம் நானும் வீசுகிறேன் ...(இதய)
என் கடலுக்குள்ளே மீன்கள் இல்லை
உன் கண்கள் ரெண்டை நீந்தவிடு
நிதம் கனவுக்குள்ளே பருவத் தொல்லை
இளம் காதல் நெஞ்சை வழங்கிவிடு
என் தோட்டப் பூவிலும் வாசம் இல்லை
சில நேரம் அங்கே உலவிவிடு
என் இரவுப் புத்தகத் தாளில்
நிலவுக் கவிதை நீயாக
உன் உறவுப் பெட்டகம் அதிலே
உறங்கும் ஒட்டகம் நானாக
கைப்பேசிக்குள் “சிம்” போல் நீயும் தங்கிவிடு
நான் அழைக்கும்போது செல்லச் சிணுங்கள் சிதறிவிடு (இதயத்திலே)
என் நந்த வனத்தில் தென்றல் இல்லை
நீ கடந்து போனால் போதுமடி
குளிர் மார்கழி பனியும் சுடுது
நீ சிரித்தால் பூக்கள் சிலிர்க்குமடி
தென்னை வளர்த்தும் இளநீர் அருந்தத்
தேடித் திரிந்தேன் தாகத்தில்
உன் இடையில் பார்த்தே வியந்தேன்
பருவம் கொண்ட மோகத்தில்
என் இளமைக் கால வானில்
இரவு காலம் எப்போதும்
ஒரு உதய பொழுதாய் புலர்ந்தாய் நீயும் இப்போது
இனி இதயம் இதயம் கலந்தால் தப்பேது.( இதயத்திலே)
(ஒரு பாடல் முயற்சி )
மெய்யன் நடராஜ்