ஆண்களின் தினம் ---- அவனின் தினம்

இன்று ஆண்களின் தினம் அல்ல
என் அவனின் தினம்......
அவனே என் முதல் ஆண்மகன்
என் பெண்மையை முழுதும் ஆல்பவன்.....
என் வெட்கத்தின் விளிம்பானவன்
சொர்க்கத்தின் சொந்தமானவன்.....
என் கோபத்தில் கொஞ்சலானவன்
நான் கொஞ்சும் போது
மிஞ்சுவான் இவன்.....
என் தேவைகளின் தேவையை பூர்த்தி செய்ய
வாய்மொழி தேவையில்லை என்று எனக்கு உணர்த்தியவன்.....
இன்று முப்பொழுதும் உன் கற்பனையே
என் மூச்சும் எனக்கு சொந்தம் இல்லையே.....
இப்படியே கற்பனையிலேயே 10 கல்யாணம் பண்ணி முடிக்க
ஆண் மகனோ பெண் மகளோ ஏதோ ஒன்று பிறந்திருக்க.....
உறவினர்கள் உன் சாயல் என்றுரைக்க.....
நான் எப்படி சொல்வேன் அவர்களிடம்......

நம் காதலின் சாயல் என்று.....

எழுதியவர் : அஞ்சலி (17-Jun-19, 3:10 pm)
சேர்த்தது : அஞ்சலி
பார்வை : 121
மேலே