காதல்

கனவொன்று கண்டேன்
கனவில் அவளைக் கண்டேன்
என் மனதில் இவள்தான் என்னவள்
என்று கற்பனையில் வடித்து தேடியவளை
இது கனவா நெனவா என்று தெரியாது
கனவில் கனவு கண்டேன் அவள்
என்னருகில் வந்து என் காதில்
ஏதோ காதல் கீதம் பாடுவதாய்
அதில் நான் மகிழ ..... கொக்கரக்கோ
சேவல் கூவ , கண் விழித்தேன்
கனவும் கலைந்தது விழித்துக்கொண்டேன்
ஒன்றும் புரியாது அவளைத் தேடினேன்
அவளைக் காண்பேனா , ....... கனவில் வந்தவள்
நெஞ்சில் நிறைந்துவிட்டாள்
எப்போது என் கைப்பற்றுவாளோ என்னவளாய்
இல்லை இவள் வெறும் கனவுலவு நங்கையாய்
இளவங்கிளியாய் என்னை காக்கவைப்பாளா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jun-19, 3:59 pm)
Tanglish : kaadhal
பார்வை : 433

மேலே