என் அப்பா

அன்பின் ஊற்றாய்
அரவணைக்கும் தெய்வமாய்
காக்கும் கடவுளாய்
திகழும் ஜீவன்- அப்பா!

என் தெய்வம்
என் முதல் தோழன்
என் ஆசான்
என் குழந்தை
என் பலம்
என் வரம்
என் சிந்தனை - என் அப்பா!

எல்லா அப்பாவிற்கும் தன் பிள்ளை அழகே!
அழகை காணாது அன்பை விதைக்கும் ஒரே உயிர் - அப்பா!

எனக்காய் வந்த ஆண்தேவதை,
இறைவன் எனக்காய் தந்த வரம்
இவரையன்றி எவரும் எனக்கு உயர்வில்லை!

தன் கழுத்தை எனக்காய் ஏணியாக்கி,
தன் தோளை எனக்காய் வண்டியாக்கி,
தன் மார்பை எனக்காய் தொட்டிலாக்கி,
தன் இதயத்தில் என்னை சுமந்திடும் அன்னை- என் அப்பா!
நான் அடித்தால் எனக்காய் அழுது,
நான் சிரித்தால் என்னுடன் சிரித்து,
எனக்காய் வாழும்
என் சாமி - என் அப்பா!

இறைவனிடம் நான் கேட்பது,
வரும் ஜென்மங்களில்
என் அப்பா
என் மகனாய்
என் கருவில் - உதித்து
அவரை நான் சீராட்ட வேண்டுமென்று!
இச்ஜென்மத்தில்,
வளர்ந்த பிள்ளையான
என் அப்பா - என்றும்
வளமுடன் வாழ வேண்டுமென்று!

எழுதியவர் : arhtimagnas (17-Jun-19, 8:03 pm)
சேர்த்தது : Sara Tamil
Tanglish : en appa
பார்வை : 150

மேலே