மோகனதாஸ் காந்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மோகனதாஸ் காந்தி |
இடம் | : anniyenthal (madurai) .now I am in ABUDHABI |
பிறந்த தேதி | : 02-Oct-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 1381 |
புள்ளி | : 328 |
nan oru kavithai piriyan
nalla padalgal virumbi ketben.
nagaisuvai vedios megavum pedikkum
உன் விழி என்னும் உளியால் நீ
என்னை பார்த்த போதெல்லாம்
சிற்பங்களாய் என்னை சீரமைத்தேன்
நீ என்மேல் மேலும் படவேண்டும்
என்ற பரந்த ஆசைகளோடு..
எண்ணமும் ஏக்கமும்
என்னுள் வாட்டி வதைத்தன..
என்று நீ என்னவளாய் என்னோடு
இருப்பாய் என்ற எதிர்பார்ப்புடன்.
உன்னிடம் உதிர்க்க இருக்கும்
முதல் வார்த்தைக்கு முக்கணிகளினும்
சுவை மிகுந்த வார்த்தைகள் தேடி
தோற்றேன் உன்னுடைய பெயரினைவிட
பெரிதாய் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து..
தமிழழகி விரும்புகிறேன் உன்னை !..
ஆச்சு பத்து வருஷம்
ஆனாலும் புள்ள இல்ல
ஆம்பளை தானா, அவென் ! .. ன்னும்
ஆத்தா புது பொண்ணு !
அந்த பக்கம் போக வேணாம்.
இலவங்காயா அவ இருக்கா,
பத்து வருஷம் பாத்தபடி.. ன்னும்
சொன்னவக இன்னைக்கி,
ஆயிருக்கும் அம்புட்டு வருஷம்,
ஆண்டவன் படைக்க,
அவளுக்கு பொறந்த அந்த
ஆழி முத்துக்கு !...ன்னு, சொன்னப்ப
சொர்க்கம் போயி திரும்பி வந்தாள்..
அவள் பெற்ற பிள்ளைக்கு அதுவும் இணை இல்லை என்று..
(நாத்து நடும் நாகம்மாள் , செல்லாத்தாள் இருவரும் அவர்கள் கதையையும் ,ஊரு கதையையும் பேசிக்கொண்டு நாத்துநடவு நடக்கிறது )
நாத்து நடும் நாகம்மா
நான் சொல்லுஞ் சொல்ல கேலம்மா !
என்னாத்த ஏஞ்செல்லாத்தா
சொல்லாத்தா எம் பெரியாத்தா
ஏலா எடுத்தஎடுப்பிலையே
இந்த ஆத்து ஆத்துரவ
சரி சொல்லு பெரியத்தா
''முக்காணி நெல வயக்காட்டில்
மூணு செண்டு பாத்திகட்டி
தண்ணிபாச்சி தொழியுழுது
பரம்படிச்சு உரம்போட்டு
ஊறவச்ச வெதநெல்ல
காலம் பாத்து வெதசிறனும்
அப்பப்ப தண்ணிவிட்டு
தேவபபட்டா மருந்தடிச்சு
இப்பபொறந்தபுள்ள போல
பொத்தி பொத்தி வளத்திடனும்
இருவத்தியொரு நாள்கழிச்சி
கொமரிபுள்ள ரவுக்க போல
அப்போ எனக்கு 16 வயசிருக்கும்
பாலிடெக்னிக் முதலாமாண்டு
முதல் நாளுக்கும் முந்தைய இரவு
பிறந்த நாள்முதலாய் உன் முந்தானை பிடித்துக்கொண்டு
உன்னையே சுற்றிவந்த உன் ஒரே செல்ல மகன் (நான்)
முதன்முதலாய் படிப்பிற்காக உன்னை பிரியவேண்டி வந்தது
இத்தனைக்கும் ஒரேமாவட்டதின் கடைசிமூலை காரைக்குடி
அதிகபட்சம் 80 கிலோமீட்டர் தொலைவு கூட இருக்காது
அதுவே உனக்கும் எனக்கும் செவ்வாய் கிரகமாய் தோன்றியதே அம்மா உனக்கு நெனவிருக்கா ?
நீ அப்பாவிடம், ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு நு
ஒத்த ஆம்பள புள்ள பெத்துருகேன்,
இங்கயே மதுர கோட்டையில இல்லாத காலேசா இங்க இருந்தா புள்ளபோயிட்டு போயிட்டு வருவான்ல
இந்தமனுசன் நான்