புள்ள

ஆச்சு பத்து வருஷம்
ஆனாலும் புள்ள இல்ல
ஆம்பளை தானா, அவென் ! .. ன்னும்

ஆத்தா புது பொண்ணு !
அந்த பக்கம் போக வேணாம்.
இலவங்காயா அவ இருக்கா,
பத்து வருஷம் பாத்தபடி.. ன்னும்

சொன்னவக இன்னைக்கி,

ஆயிருக்கும் அம்புட்டு வருஷம்,
ஆண்டவன் படைக்க,
அவளுக்கு பொறந்த அந்த
ஆழி முத்துக்கு !...ன்னு, சொன்னப்ப

சொர்க்கம் போயி திரும்பி வந்தாள்..
அவள் பெற்ற பிள்ளைக்கு அதுவும் இணை இல்லை என்று..

எழுதியவர் : கணேச மூர்த்தி (1-Sep-15, 3:19 pm)
Tanglish : pulla illa
பார்வை : 100

மேலே