தேன்கூட்டைக் கலைத்த விசாரணை வாக்குமூலம்
![](https://eluthu.com/images/loading.gif)
உங்களுக்குத் தேர்ந்த கட்டமைப்பும்
உயர்சிந்தனையும் இயல்பிலேயே
வாய்த்திருக்கிறது
தனித்தனி அறையென்றாலும்
ஒரு கூடென்றே சொல்லிக்கொள்ள முடிகிறது
உங்களுக்கு,
உழைப்புக்கு எறும்பையும்
வேறோர் உதாரணமாக சொல்லலாமெனினும்
வெறும் தத்துவத்தால்
என் எச்சில்களின் பசி தீர்ந்திடாது
ஓய்வொழிச்சல் இல்லாத
தன்னலம் பாராத
தகத்தகாய உழைப்பினிலே
சேர்த்திட்ட தேனையெல்லாம்
உங்களுக்குளே பகிர்ந்து கொண்டபின்...
காய்ந்த கரும்பொன்றை
நாக்கில்தான் தடவிச்செல்வார்
திருவோடும் துறந்த பட்டினத்தார்...!