அகோரதாய்களால் அகால மரணமடையும் பிஞ்சுகளுக்காய்

மழலை அழுகையால் ,அவளின் அன்பால்,
பிணியிலும் கொடிய பிணியது ,வறுமை
சூழ்ந்த போதும் தாய்பால் சுரந்தது
எல்லாம் அந்தக்காலம் ....

அழகு கூடிட அடுத்தவனை கவர்ந்திட
அயராதுழைக்கும் கணவனின் உழைப்பில்
வாங்கும் ஆவின்பாலை அரைகுறையாய்
ஊட்டுவது இந்தக்காலம் ..

அல்லும் பல்லும் உழைத்துவிட்டு
அழுகின்ற மழலைதனை மாரோடு
அணைத்து அன்புபாலை ஊட்டி வளர்த்தது
எல்லாம் அந்தக்காலம் .....

கண்டவனிடம் காமப்பசி கொண்டாட
ஈன்றெடுத்த மழலைதனை ஈவிரக்கமற்று
கொல்லுவதுதான் இந்தக் காலம் ..

கங்காரு தாய்களெல்லாம் அந்தக்காலம்
கன்றாவி தா(பே )ய்கள்தான் இந்தக்காலம்
அன்பான தாய்களெல்லாம் அந்தக்காலம்
அகோரோமான தா(பே)ய்கள்தான் இந்தக்காலம் ....

தாய்மையின் மே(மெ)ன்மை சொல்ல
வார்த்தையில்லையடி பெண்ணே
தகாத உறவுகொள்ள ,தரித்திரத்தின்
கைப்பிடிக்க பிஞ்சுநெஞ்சை பிளப்பது

பெண்ணினத்துக்கு இழுக்கிழும் இழுக்கடி
பெண்ணே இனியேனும் திருந்திநீ வாழடி ....

அகோர தாய்களால் அகால மரணமடைந்த
மழலைகளுக்கு தினம்தினம் செய்தி
படித்து நொந்துகொள்ளும்
இந்த ஜீவனின் மலர் அஞ்சலி .

எழுதியவர் : ப்ரியாராம் (1-Sep-15, 3:56 pm)
பார்வை : 75

மேலே