காதல்
இல்லாத ஒன்றை
இருப்பதாய் நினைத்து
நினைவுலகில்
வாழ கற்று கொடுக்கும்
அனுபவம் அந்த காதல்..
கற்பனையில் கவிதை வரும்
கருமம்.
அது அந்த இருவருக்கும்
மட்டும் இனிமை தரும் .
இம்சைகள் பல இருந்த போதும்
இடையூறுகள் பல வந்த போதும்
கண்கள் தேடும் கண்மணி அவள்
எங்கே என்று ? இந்த காதலினால் .
தனிமை என்பது அகராதியில்
அகன்று போகும்..அவள் எப்போதும்
அருகில் இருப்பதாய் தோன்றும்.
என்றும் நீ கவனிக்கபடுவதாய்
உணர்வாய்.
உண்மையில் அனைவருக்கும்
ஆயிரம் வேலைகள் உண்டு
ஆனாலும் அடுத்த வீட்டுக்காரிக்கு
அவர்களை பத்தி பேசுவதில்தான்
இருக்கிறது இன்பம்..
இந்த காதலினால் ..