என்றோ மரணித்தவள்
என்றோ மரணித்தவள்...
இரவும் பகலும்
ஒன்றாகிப் போன பொழுதுகள்...!!
இருட்டறைக்குள்
முடங்க ஆரம்பித்த
பிந்தைய நாட்களில்
கிழமைகள் தெரியாமல் போனது...!!
உணவினை மறந்து
தேய்மானத்தில் உருக்குலைந்து
எனக்கான அடையாளத்தை
தொலைத்திருந்த காலங்கள்...
உருக்குலைந்த சுவாசத்தில்
முனகல் காற்றில்
வெளியேறிக் கொண்டிருப்பது
உனது பெயராகவே ...!!
வெளியேற்றத்தை எல்லாம்
உன் நினைவுக் காற்று நிரப்பியத்தில்
தொடர்ச்சியான முனகல்கள் .!!
"சனியன் செத்தொழியட்டும்
இன்னமும்
அவன் நினைவில் இருக்கிறாள்"
உறவுகளின் வசை மொழிகள்
கிணற்றுக்குள் கேட்பதாய்...!!
எங்கே அறிந்திருக்கப் போகிறார்கள் ..??
உன்னை உறவுகள்
அடித்து விரட்டிய
அந்த தருணமே
நான் மரணித்துப் போனேன் என்று..!!