காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்.

கடல்நீரின் உப்பு கரைந்திட,
கானல் நீரை கையால் பருகிட,
காரிருளின் கருமை நீங்கிட,

காத்திருப்பவன் போல,

காகிதத்தில் உன் நினைவின்
என் கற்பனைகள் கரைந்திடும் வரை
காத்திருக்கிறேன்.

முடியாதென்பதை உணர்ந்த மூடனாய்.
என்றும் உன் அழியா நினைவுகளோடு.

எழுதியவர் : கணேச மூர்த்தி (8-Jul-16, 2:27 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 189

மேலே