இளைஞனே
இலக்குகள் ஏதுமின்றி
வேதனைச்சகதியில்
அவசரகதியில்
விதைத்தவையெல்லாம்
இன்று
உன் முகத்தில் விரக்திச்செடிகளாய்....
இனியாவது
எண்ண விதைகளை
இலட்சியத்தில் தோய்த்தெடுத்து
நடவுசெய்,,,
முயற்சி வேர்கள் தளர்கையில்
தன்னம்பிக்கைத்தண்ணீரை
முழுமையாய்ப் பாய்ச்சு
நிச்சயம் உன்பெயரை
தனக்குள் பதித்துக்கொள்ள
சாதனைப் புத்தகம்
உன்னிடம் அனுமதி கேட்கும்..