விருட்சம் உடைத்த கூடுகள்
உயிரின்
இறுதிதுகளில் கூட
ஈரம் தடவினாய்
ஆயிரம்
மைல்களுக்கு
அப்பாலிருந்து!!
ஓர் முத்தத்தில்...
அழுகையில்
முழுதாய் என்னுள்
உனை மெய்பித்த
தருணங்களில்
மூச்சடைக்க
அணைத்தேன்
தலகணையை...
சொப்பனத்தின்
வேர்கள்திரட்டி
வெறுமனே
நம் நியத்திற்கு
தாரைவார்த்தேன்!!
நாள் தோறும்..
என் ஊனக்காலில்
அமர்ந்திருக்கும்
ஒற்றை ஈ
கலைக்க கூட
என்னுள்
எண்ணமில்லை...
எரிந்து போன
வாழ்வின்
கோலம் மாற்ற
அறிந்து தானே
அனுப்பிவைத்தேன்
அரபு தேசத்திற்கு..
என்னால்
இயலாமலில்லை
பெட்டிக்கடை வைத்து
பெண்சாதி உனை
காப்பாற்ற..
நாலு வருசம்
நாக்க கடிச்சு
மாடா உழைசா
நம் நிலமை
மாறும்!!
ஆதங்கம் பாதியிலும்
அவா மீதியிலும் தானே
அன்பே உனை
தொலைத்தேன்....
ஐயகோ!!
நேற்றுத்தானே
செய்தியறிந்து
செய்வதறியாது
தவித்தேன்...
நம் நாட்டு
நாய்க்கு கிடைக்கும்
உணவில்
ஒருபாதிகூட
உனக்கு
இல்லையாமே!!
என் போல்
மக்காளே!!
சொந்த வயலை
விற்று
சோற்றுக்கும்
வழியில்லாமல்
தவித்திருத்தல் தகுமோ!!
சத்தியமாய்
சொல்கிறேன்
என் சகியின்
இன்பம் தொலைத்த
இம்சையாளனாய்
சொல்கிறேன்...
அரைவயிறோ!
கால்வயிறோ!
தலை முட்டும்
குடிலில் இருந்து
விண்மீன் ரசித்தபடி
கஞ்சிகுடித்தாலும்
வேண்டாம்!!!!
எம் தேச
பெண்களுக்கு
அரபு தேசம்...

