arun - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : arun |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 09-Jan-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 24 |
மண்ணு மேல நடந்தா! கல்லு குத்துனு
மாருல சுமந்த என்ன,
நான் அடிச்சா, செத்ததா நடிச்சு, நம்பும்
நேரம் என்ன ஏமாத்தி சிரிச்ச, உன்ன
கழுத்துல மால போட்டு,
மூக்குல பஞ்ச வச்சு, கைக்கால் கட்டி
கிழக்குல விளக்க வச்சு
இப்பயும் நடிக்கிறய சொல்லு!
யானையா மாறுவ, நான் ஏற
குதிரையா மாறுவ, நான் சிரிக்க
பிணமா மாறிட்டியா நான் அழுகனு
அக்கா அழுகுறா! காதுல விழலயா?
அண்ணன் மனச கல்லாக்கி, உன்ன
இல்லாத சொர்க்கத்துக்கு அனுப்ப
ஐயரை கூப்புட்டான்!
இருக்குற கண்ணீரும் காசும் கரைய
எத கேட்டாலும் "சாத்திரம் செல்லுது அதான் உத்தமம்னு" ஐயர் சொல்ல
அழுக மறந்து வித்த பார்த்தோம்
ஐயர் சொடுக்கிய சொடுக்குக்கு அண்ணன் ஆட
என் காதலுக்கு அவள் தந்த கருணை நீ!
என் அன்புக்கு சாட்சி நீ!
காதலுக்கு உலகத்தில் பெயர் ஆயிரம்
எதுவாயினும்
அவள் மீது நான் கொண்ட காதலின் பெயர் "யுகன்".
ஆழ கடலின் அமைதி உன் மனம்
முத்தாய் உலகை பார்ப்பேன், உன் விழி வழி
சிரிப்பு அங்கு எதிரொலி
அழுகை உன் மொழி
உன் ஆர்வமும் கற்றலும் அராஜகம்
உன் பேச்சும் தூக்கமும் அழகு
உன் அடையாளமற்ற வெறும் முத்தத்தில்
என் பிறவி பாவத்தை கழுவுவேன்
கடவுளின் கருவறை வேண்டாம்
உன் ஏட்ரியமோ வென்ட்ரிக்கிளோ போதும்
வியர்தால் தான் உழைப்பாளியா?
TL ஊதியத்திற்கு மேல் target வைத்தான், மறுத்தேன்
சப்பாத்திகள்ளி முள்ளெடுத்து உ ரைய வைத்து ஆசனவாய் செருகினாற் போல் சென்னான் , முறைத்தேன்
ரோஜவை தேனில் முக்கி உதட்டில் தடவி ஞாபகப்படுத்தினான்
எனது ஊரின் பெயரையும், என் இன்றைய வாழ்வையும்
இனி சொன்னால் நிலாவையும் பிடிப்பேன் சிரித்தபடி
சென்றான் அவன் ஊரையும் வாழ்வையும் நினைத்தபடி
இங்கு இரைக்கு இரை பழி
பசிக்கு பணியும் கூலி
உண்டு இங்கு வேறுபாடு
காந்தி பசித்ததற்கும்
பசித்தவன் பசித்ததற்கும்
வியர்வையில் மட்டும் அல்ல
முதுகு வலியிலும் உழைப்பாளியை காணலாம்.
அன்று ஓர் பயணத்தில்
மட்பாண்ட கடை ஓரத்தில்
பித்தன் ஒருவனை பார்த்தேன்
பொருளை விரல்காட்டி என்னவென்றான்
சட்டி என்றேன் அது
பானைஎன்றேன் இது
மூடி என்றேன் அவன் சிரித்தான்
கண் பார்த்து எல்லாம் மண் என்றான்
சித்தம் தெளிந்தது எனக்கு
அவன் அழுக்கு சட்டையில்
அன்பே சிவம் வாசகம்
துள்ளிவரும் காவிரிக் கரையில்நீ தோள்சாய்ந் திருக்க
துள்ளிவிழும் மீன்கள் உன்கண்ணோடு போட்டி போட
அந்திப் பொழுதும் அழகாய் வானில் சாய்ந்திருக்க
சந்திரனும் வந்தானடி வானில் காதல் பேசிடவே !
*BPO*
பகலில் தூங்கும் வௌவால் நாம்...
இரவில் முழிக்கும் ஆந்தைகள் நாம்.....
இரவே கண்களுக்கு பகலானது....
பகல் வெளியும் கண்ணில் கனவானது....
பழித்தவனுக்கே பணியாற்றும் பரதேசி கூட்டம் இது.....
பணத்திற்கு படித்த பஞ்ச கூட்டம் இது.....
காதலும் வலி என்பதை உணர்தேன்..
அவளை கண்டா போது அல்ல..
அவள் அவனை கண்டா போது.!
இப்படிக்கு
ஒரு தலை காதலன் .