பிறந்த நாள்
என் காதலுக்கு அவள் தந்த கருணை நீ!
என் அன்புக்கு சாட்சி நீ!
காதலுக்கு உலகத்தில் பெயர் ஆயிரம்
எதுவாயினும்
அவள் மீது நான் கொண்ட காதலின் பெயர் "யுகன்".
ஆழ கடலின் அமைதி உன் மனம்
முத்தாய் உலகை பார்ப்பேன், உன் விழி வழி
சிரிப்பு அங்கு எதிரொலி
அழுகை உன் மொழி
உன் ஆர்வமும் கற்றலும் அராஜகம்
உன் பேச்சும் தூக்கமும் அழகு
உன் அடையாளமற்ற வெறும் முத்தத்தில்
என் பிறவி பாவத்தை கழுவுவேன்
கடவுளின் கருவறை வேண்டாம்
உன் ஏட்ரியமோ வென்ட்ரிக்கிளோ போதும்