ஏழைகளின் உலையில்
மெட்ரோவில் போயி 
ரேசன் அரிசி வாங்கி வைக்கும் அளவிற்கு வசதிகள் வந்தாலும் அதில் மேயும் புழு பூச்சிகளை கட்டுப்படுத்த தான் நாட்டில் வசதிகள் இல்லை 
அது என்னவோ தெரியவில்லை
ஏழைகளின் உலைகளில் எதைப்போட்டாலும்  வெந்து விடுகிறது
வறுமை விறகு வைத்து எரிக்கையில்

