ஐக்கூ கவிதை

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

*ஐக்கூ கவிதைகள்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

நல்ல நிலையில் கிடக்கிறது

ஒற்றைச் செருப்பு

குப்பைமேடு

✅✅✅✅✅✅✅✅✅✅✅

மரம் வெட்டப்பட்டது

வெயிலில் காய்கிறது

நிலம்....

✅✅✅✅✅✅✅✅✅✅✅

பூக்கடை

வாடி இருக்கிறது

பூக்காரி முகம்...

✅✅✅✅✅✅✅✅✅✅✅

பால் நிலா

மனிதன் குடியேறினால்

சிவப்பு நிலா

✅✅✅✅✅✅✅✅✅✅✅

எரிந்த மத்தாப்பு

ஞாபகம் படுத்துகிறது

சிவகாசி சிறுவன் விரலை...

✅✅✅✅✅✅✅✅✅✅✅

மழையை எதிர்பார்த்து

காத்திருக்கிறது

மின்வாரியம்...

*கவிதை ரசிகன்*

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

எழுதியவர் : கவிதை ரசிகன் (8-Aug-24, 8:41 pm)
Tanglish : aikkoo kavithai
பார்வை : 48

மேலே