ஒப்பாரி

மண்ணு மேல நடந்தா! கல்லு குத்துனு
மாருல சுமந்த என்ன,
நான் அடிச்சா, செத்ததா நடிச்சு, நம்பும்
நேரம் என்ன ஏமாத்தி சிரிச்ச, உன்ன
கழுத்துல மால போட்டு,
மூக்குல பஞ்ச வச்சு, கைக்கால் கட்டி
கிழக்குல விளக்க வச்சு
இப்பயும் நடிக்கிறய சொல்லு!

யானையா மாறுவ, நான் ஏற
குதிரையா மாறுவ, நான் சிரிக்க
பிணமா மாறிட்டியா நான் அழுகனு
அக்கா அழுகுறா! காதுல விழலயா?

அண்ணன் மனச கல்லாக்கி, உன்ன
இல்லாத சொர்க்கத்துக்கு அனுப்ப
ஐயரை கூப்புட்டான்!
இருக்குற கண்ணீரும் காசும் கரைய
எத கேட்டாலும் "சாத்திரம் செல்லுது அதான் உத்தமம்னு" ஐயர் சொல்ல
அழுக மறந்து வித்த பார்த்தோம்

ஐயர் சொடுக்கிய சொடுக்குக்கு அண்ணன் ஆட பொம்மையாய்
என் மகனும் பாத்து சிரிச்சு வித்த பாத்தான், மறந்த அழுகய ஞாபகப்படுத்த
வந்தது வண்டி, விடே அழுது
வண்டி ஏறி போனோம் சுடுகாட்டுக்கு

பசி தெரியாத ஆடுகள் சுடுகாட்டில்
பிணங்களின் மாலை மலையா இருந்தது
ஆயிரம் அழுகைகள், எனக்கு புரிந்தது
வந்தவர் போவது இயற்கை
உடல் எரித்து குளித்து வந்தேன்
பசித்தது.

எழுதியவர் : அருண் குமார் (14-Sep-24, 4:01 am)
சேர்த்தது : arun
Tanglish : oppaari
பார்வை : 24

மேலே