ஐக்கூ கவிதை

🟩🟦🟪🟧🟨🟫🟩🟦🟪🟦🟩

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🟥🟧🟨🟩🟦🟪⬛🟫🟥🟧⬛

கீதையை வைத்திருந்தாலும்

ஞானம் வரவில்லை

புத்தகக்கடைக்கு

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

பூக்கடை

வாடியிருக்கிறது

பூ விற்பவரின் முகம்

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

உழவன் வீட்டில்

பொங்கல் பொங்கியது

உடைந்த கலப்பையில்

◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️

தூணிலும் இருக்கிறது

துரும்பிலும் இருக்கிறது

ஊழல்

🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

எதிர் வீட்டில் திருமணம்

உறங்க முடியவில்லை

முதிர்கன்னன்


*கவிதை ரசிகன்*

⬛🟩🟧🟦🟥🟪🟫⬛🟩🟧🟦

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-Sep-24, 8:51 pm)
Tanglish : aikkoo kavithai
பார்வை : 52

புதிய படைப்புகள்

மேலே