அன்பு
அன்று ஓர் பயணத்தில்
மட்பாண்ட கடை ஓரத்தில்
பித்தன் ஒருவனை பார்த்தேன்
பொருளை விரல்காட்டி என்னவென்றான்
சட்டி என்றேன் அது
பானைஎன்றேன் இது
மூடி என்றேன் அவன் சிரித்தான்
கண் பார்த்து எல்லாம் மண் என்றான்
சித்தம் தெளிந்தது எனக்கு
அவன் அழுக்கு சட்டையில்
அன்பே சிவம் வாசகம்