வாழ்த்து
அன்பும் பண்பும்
அறமென உடைத்து
அறிவின் திறனும்
செவ்வனேயிடத்து
நட்பில் நலமும்
நானிலம் உடைத்து
வீணையின் வசீகரம்
விடையாய் இவ்விடத்து!
மூக்குத்தி முகத்தழகு
முத்துப்பல் சிரிப்பழகு
அவையில் நீ அழகு
ஆகட்டுமே பேரழகு!
இனிய பிறந்த நாளில்
இறையருள் நிறைந்து
இன்புற்று வாழ்க...
வளங்கள் பல நிறைந்து
வாழ்வாங்கு வாழ்க!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
