krishna viji - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : krishna viji |
இடம் | : theni dt |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 410 |
புள்ளி | : 38 |
மெல்லிய புன்னகையை
சொல்லியடிக்கும்
சந்நிதியாய்...
சாயங்கள் பூசாத
சங்கடங்கள் நேராத
வேஷங்கள் காணாத
கோஷங்கள் நீயாய்....
நிஜங்களோ
நிழல்களோ
நிதர்சனமே
நீயாய்...
அனர்த்தங்கள்
ஆளாத
அரிச்சுவடியாய்...
ஆட்டுவிக்கும்
கடமை முன்
ஆழ்கடல் முத்தாய்...
தானான குணமாய்
தாராள மனமாய்
ஆனாலும் சொல்வான்
அடக்கி
வாசிப்பவனாய்....
பட்டாசாய் சுடும்
பள்ளித்தோழமையில்
விசில் வாணமாய்
விண் காண்பான்
பகட்டாய்....
இவனோடு பேசிட
இங்கோர்
திரையில்லை...
நட்பெனும்
நகர்வலத்தில்
நீ வானமே எல்லை...
தலைக்கனம்
கொள்ளாத
திமிர்தனம்
இல்லாத
அரியவகை
படைப்பா நீ...
ஆகட்டும்
பார்க்கிறேன்!
வண்ணங்களாய்
எண்ணங்களில்
சிறக்கும்
என்
அன்புமகளே!
சிறுமகள்
இப்போது
இளம்பெண்
ஆனாலும்
அப்பாவின்மகளே
நானென்று
அன்பைபொழிகிறாய்!
தோள்தூக்கி
வளர்த்தமகள்
தோள் உயரம்
வந்துவிட்டாய்..
எதிர்நின்று
எனைநோக்கி
விழிகள் விரிய
உலகின் கதை
உரைக்கின்றாய்!
உற்ற நட்பின்
தரவரிசையில்
தன்னிகரில்லா
தோழன்
தந்தை நீயே
என்கிறாய்...
தன்னலமற்ற
அன்பின் தரம்
உணர்த்துகிறாய்!
புகைப்பட
பதிவிலும்
உன்வரி
செய்திகளிலும்
எனையே
முன்வைத்து
பாசத்தை
பரிசளிக்கிறாய்
புன்னகையும்
பூரிப்புமாய்
நான்!
தந்தை என்
கரம்பிடித்து
நடை பயின்றாய்..
விரல்கோர்த்து
உலகளந்தாய்..
வளரும்
மகள்
சிரமம்
கொ
மீண்டுமாய் எனது நன்றிகள்
எனத(எ)ருமை நட்புக்களே!
எண்ணங்களில் சறுக்கினாலும்
வண்ணமயிலிறகாய்
மனம் வருடுகிறாள் ஒருத்தி....
மானசீகமாய் மடிசாய்கிறேன் நான்!
மனசாட்சியாய் நின்று கேள்வியால் வென்று
விடைசொல்கிறாள் இன்னொருத்தி...
வடம் கொண்ட தேராகிறேன் நான்!
அளாவளாவ அவளுக்கு நேரமில்லை
இருப்பினும் இருப்பில் எனக்காய்
இடம் தரும் இன்னொருத்தி...
இவள் முன் பணிவாகிறேன் நான்!
என் பயணப்பாதையில்
ஏற்ற இறக்கங்களாய்
எனை சீராக்கும் ...மந்தாகினிகளே
உங்கள் முன்
சுக்கு நூறாகி சிதறுகிறது -என்
சுயகோபதாபங்கள்...
மடைவெள்ளமாய் விழிநிறைந்து
கன்னம் தொடும் கண்ணீரும்
கதை சொல்கிறது
மானசீகமான அன்பிற்
நீர் பார்த்த விழிகள்
நீர் கோர்த்து.....
தூரங்களின் துயரங்கள்
துடைக்கப்பட
நீள்கின்ற கரங்களாய்
என் நட்புக்கள்!
உணர்வுகளின் மதிப்பறிந்த
உறவுகளாய் இங்கு....
புழுதியாய் உடல் கொண்டு
புன்னகையுடன் சுற்றிவந்து
படிக்கட்டுகளில் ஏறியிறங்கிய
பழைய நினைவுகள்....
புரட்டிப்போடுகின்ற
புத்தகத்தின் பக்கங்களாய்!
நீ நிறைந்த நாட்களில்
மனம் ததும்பும் மகிழ்வாய்!
நீர் குறைந்து போகையில்
தினம் வெதும்பிய பொழுதாய்...
விவரம் அறியா வயதினிலே
நினைவில் பதிந்த நீர்வளமே!
தாய்நாடு வரும்போது
தவறாமல் பார்த்திட்ட
தெப்பக்குளம்......
தவறவிட்ட வருகையிலும்
தரமான பதிவாய்!
நன்றி நட்பே......
பார் போற்றும் பாரதி
💪💪💪💪💪💪💪💪💪
எட்டுத்திக்கும் மக்களைத் தீப்பந்தம் கட்டவச்சி
எட்டயபுரம் ஈன்றெடுத்த சிவகாசித் தீக்குச்சி
வல்லமை கருவிலேயே வளர்த்துக்கொண்ட நெஞ்சுரம்
செல்லம்மாள் துணையென சிறுவயதுச் சுயம்வரம்
கண்ணும் கருத்துமான கல்வியறிவு நுன்னினிலே
பன்மொழித் திறனுனக்கு பதினோரு வயதினிலே
பருவத்தில் தமிழன்னை மனதினிலே இடம்பிடிக்க
பகவத்கீதை நூல்தன்னை தமிழிலே வடித்தெடுக்க
கோடிமக்கள் அனைவருமே கொத்தாக எழுச்சியுற
சுதேச மித்திரனே சொல்லாயுதம் பயிற்சிதர
சின்னச்சின்ன பிள்ளைகளை சிலிர்ப்பூட்டிய வண்ணமடா
கண்ணன்பாட்டும் குயில்பாட்டும் என்னஒரு எண்ணமடா
படிப்பறிவும் எழுத்தறிவும் பார்த்த
என் இனிய தோழியே!
நன்றிகள் பலவாகி
நானுரைக்கும் ஒர் மடல்!
ஏதோ சொல்லத்துடிக்கிறேன்
எழுத்துக்கோர்வைகள்
எனை ஏளனம் செய்தபடி……
கட்டுக்குள் அடக்கமுடியுமா
அவளின் கரிசனத்தை என………
முயற்சிக்கிறேன்….
முழுதாய் முடியாவிட்டாலும்…..
இப்பொழுதெல்லாம்
சிறகு முளைத்திட்டு
சிரித்தபடி பறந்திட்டு
சீராய் சுவாசிக்கிறது
என் இதயம்!
தூரம் தொலைதூரம்
தொலைபேசி இதழோரம்
இருந்தாலும் நீ என்னருகில்!
புல்வெளிப்பூக்களில்
காண்கிறேன் உன் சிரிப்பை….
உள்ளத்தில் தோன்றியதை
உள்ளபடி உரைத்திட்டால்
உண்மையான ஆறுதலாய்
உயர்வை மட்டுமே
உன்னதமாய் எடுத்துரைக்கும்
உபயக்காரி!
ஆயிரம் சுமைகளை
அகத்தே சுமந்த
மனதில் காதலை
விதைத்து
மறைந்து விட்ட மன்னா
எங்கே சென்றாய் .?
கனவில் மட்டும்
வருகிறாய்
காதல்ரசம் பொழிகிறாய்
கண்களை திறந்து
நான் பார்த்தல்
கண்ணீராக கறைகிறாய்
கனவில் வரும்
கள்வனே
என் கண்ணெதிரில்
எப்போ வந்திடுவாய்
விழிகளால் பேசும்
வேந்தனே
என்
வேதனை எப்போ
தீர்த்திடுவாய் ?
கண்ணா உனக்காய்
காத்திருப்பேன்
கல்லறை செல்லும் முன்
வந்துவிடு ......