அரிச்சுவடி

மெல்லிய புன்னகையை
சொல்லியடிக்கும்
சந்நிதியாய்...


சாயங்கள் பூசாத
சங்கடங்கள் நேராத
வேஷங்கள் காணாத
கோஷங்கள் நீயாய்....

நிஜங்களோ
நிழல்களோ
நிதர்சனமே
நீயாய்...

அனர்த்தங்கள்
ஆளாத
அரிச்சுவடியாய்...
ஆட்டுவிக்கும்
கடமை முன்
ஆழ்கடல் முத்தாய்...

தானான குணமாய்
தாராள மனமாய்
ஆனாலும் சொல்வான்
அடக்கி
வாசிப்பவனாய்....


பட்டாசாய் சுடும்
பள்ளித்தோழமையில்
விசில் வாணமாய்
விண் காண்பான்
பகட்டாய்....

இவனோடு பேசிட
இங்கோர்
திரையில்லை...
நட்பெனும்
நகர்வலத்தில்
நீ வானமே எல்லை...


தலைக்கனம்
கொள்ளாத
திமிர்தனம்
இல்லாத
அரியவகை
படைப்பா நீ...

ஆகட்டும்
பார்க்கிறேன்!
ஆனமட்டும்
சண்டையிட்டு...


அப்படியே தொடரும்
அருமைத் தோழி

எழுதியவர் : விஜயலட்சுமி (29-Mar-23, 4:52 am)
சேர்த்தது : krishna viji
பார்வை : 87

மேலே