தெப்பக்குளம்
நீர் பார்த்த விழிகள்
நீர் கோர்த்து.....
தூரங்களின் துயரங்கள்
துடைக்கப்பட
நீள்கின்ற கரங்களாய்
என் நட்புக்கள்!
உணர்வுகளின் மதிப்பறிந்த
உறவுகளாய் இங்கு....
புழுதியாய் உடல் கொண்டு
புன்னகையுடன் சுற்றிவந்து
படிக்கட்டுகளில் ஏறியிறங்கிய
பழைய நினைவுகள்....
புரட்டிப்போடுகின்ற
புத்தகத்தின் பக்கங்களாய்!
நீ நிறைந்த நாட்களில்
மனம் ததும்பும் மகிழ்வாய்!
நீர் குறைந்து போகையில்
தினம் வெதும்பிய பொழுதாய்...
விவரம் அறியா வயதினிலே
நினைவில் பதிந்த நீர்வளமே!
தாய்நாடு வரும்போது
தவறாமல் பார்த்திட்ட
தெப்பக்குளம்......
தவறவிட்ட வருகையிலும்
தரமான பதிவாய்!
நன்றி நட்பே......