சத்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சத்யா
இடம்:  panrutti
பிறந்த தேதி :  30-Oct-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Apr-2013
பார்த்தவர்கள்:  507
புள்ளி:  102

என்னைப் பற்றி...

எழுத்தாளர், பாடலாசிரியர்
தமிழ் விரும்பி
மற்றும்
படதொகுப்பாளர்

என் படைப்புகள்
சத்யா செய்திகள்
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2015 6:17 pm

இசையை வரைந்த ஒரு
தூரிகை துயில் கொள்ள
விரும்பியதோ ?

காற்றோடு கலந்த சுவாசம்
கானலாகி மறைந்ததோ?


ராகங்கள் செதுக்கிய
உளி இன்று
உடைந்து போக துணிந்ததோ

இசை வரம் கொடுத்த கடவுள்
வரத்தினை மீண்டும்
திரும்பி பெற அழைத்ததோ?

மெல்லிசை மன்னன் எனும்
ராக சக்கரவர்த்தி
மௌன கீதம் பாடுவதோ

காலத்தை விட கொடியது
எதுவும் இல்லை

ஆயிரம் நல உள்ளங்களை
தந்து தந்து
அவசர கதியில்
திரும்பி பெறுவது
பொழுது போக்கு என்றானது

அந்த வரிசையில் இன்று
ஒரு ஜீவனும்
மண்ணை பிரிந்தது

போய் வாருங்கள்
என் ஐயனே

இனி இறந்து போனவர்களையும்
இறைவனையும்
மகிழ்விக்க
விண்ணுலகில் இசை அமையு

மேலும்

ஒரு இசை மேதைக்கு இந்த கவிதாஞ்சலி கண்ணீர் அஞ்சலி செலுத்தி விட்டு போகட்டும்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 15-Jul-2015 1:26 am
அருமையான கவிதாஞ்சலி - 'இசையே இது ஒரு கவிதையின் கவிதாஞ்சலி ஏற்றுகொள். . . .' என்ற அழகான முத்தாய்ப்பான வரிகளுடன்.... 14-Jul-2015 7:01 pm
அருமை சிறப்பான நினைவாஞ்சலி அன்புடன்,கவின் சாரலன் 14-Jul-2015 6:49 pm
உயிருள்ளவரிகள் உயிரை எழுப்பும் உன்னதம்... அற்புதம்.., 14-Jul-2015 6:22 pm
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2015 1:44 pm

பார்வைகள் என்பது
விழியின் வழியே
வெளியே சிதறும்
ஒளி சிதறல் என்றே தான்
இதுவரையில் நினைத்திருந்தேன்

ஆனால்
பார்வைக்கும்
பேச தெரியும்
பார்வைக்கும்
ஈர்க்க தெரியும்
பார்வைக்கும்
மாயம் செய்ய தெரியும்
பார்வைக்கும்
களவாட தெரியும்

போன்ற உண்மைகளை
கண்டு கொண்டேன்
உன் பார்வைகள் என்னை
பாடாய் படுத்தும்
வேளைகளில் எல்லாம்

மேலும்

அருமை ... 20-Apr-2015 2:01 pm
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2015 6:27 pm

காவடி பால்குடம்
அலகு குத்துதல்
தேர் இழுத்தல்
தீ மிதித்தல்

என

நேர்த்திகடன்
செலுத்துவதை
பார்க்கும் பொழுதெல்லாம்

உணர்ந்து கொள்கிறேன்

கடவுள்
என்ற
சக்தி
கண்முன்
நடமாடுவதை

மேலும்

சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2015 7:33 pm

ஆயிரம் கால
வரலாற்று புகழ் கொண்டதாய்

ஆயிரம் காவியங்களை
தன் கருவில்
சுமந்ததாய்

அகத்தியர் தொடங்கி
இன்றுவரை
பல புலவர்கள்
சுவாசித்த
மூச்சு காற்றாய்
இன்னும்
எத்தனையோ பெருமையுடன்
வீர நடை போட்ட
என் தாய்
மொழி
அன்னிய
ஆதிக்கத்தால்
மெல்ல மெல்ல
இறந்து
இறுதி கட்டத்தை
நெருங்கும் முன்
அனைவரும்
வாரிர்
அன்னை மொழியை
அழிவில் இருந்து மீட்க

அதே போல்
எம் பாரம்பரிய கலையும்
ஜல்லி கட்டு முதலான
வீரவிளையாட்டும்
சில
தமிழ் எதிரிகளால்
சிறுக சிறுக
கொல்ல பட்டு
கடைசி பசியுடன்
கலங்கி நிற்கும்
நிலையில்

நாளை மூட்டை மூட்டையாய்
வாய்க்கரிசி போடுவதை விட
இன்று
உயிர் பசிக்கு
உணவிடுங்கள்

மேலும்

நன்று தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Jan-2015 4:12 pm
உண்மை தான் .. தொடருங்கள் 17-Jan-2015 8:10 pm
சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2015 7:24 pm

தனி தனி தீவுகளாய்
சிதறி கிடக்கும்
உறவுகளை
ஒன்றாய்
சேர்க்கவும்

நாம் பிறந்த மண்ணோடு
புழுதி பறக்க
ஆடி களிக்கவும்

ஊரில் நடந்து முடிந்த
நிகழ்வுகளை
அசைபோடவும்
பணம் சம்பாதிக்கும்
இயந்திரமாய்
மாறி போன
மனிதனின்
வாழ்வை
மனிதனும்
மண்ணும்
ஆடும்
மாடும்
மரம் செடி கொடிகளும்

நம் முன்னோர்களின்
நினைவுகளை
சுமந்த வீடும்

ஒன்றாய்
கூடி மகிழ

என்றோ
ஒருநாள்
பொங்கல்
திருநாளை
கண்டறிந்த

முன்னோர்கள்
அனைவருக்குமான
நன்றிகளுடன்
கடந்து
செல்கிறோம்
இப்பொங்கல்
திருநாளை

மேலும்

சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2014 1:02 pm

எத்தனையோ பேர் வளர்த்த தமிழ்
நாதியற்று கிடக்கிறது
தமிழ் கலாச்சாரமோ
பாதி பாதியாய்
இறக்கிறது
தமிழை வளர்ப்பதாய்
தம்பட்டம் அடிக்கும்
தலைவர்களின் பிள்ளைகள்
ஆங்கில பள்ளிகளில்
அங்கிலம் அறிந்தவனுக்கே முன்னுரிமை
அலுவலகங்களில்
டீகடையில் முதலாளியாய் அமர
மலையாளிக்கு தெரியும்
அவனிடம் கடன்கேட்க தான்
நமக்கு வரும்
குல்பியோ
பானிபூரியோ
விற்று பிழைக்க
வட மாநிலத்தவனுக்கு புரியும்
சான்றிதழை வைத்துக்கொண்டு
அலையதான் நம்மால் முடியும்
ஆயிரமாயிரம் தேவதைகள் உள்ள
என் மாநிலத்தில்
மும்பைக்கும்,
கேரளத் திற்கும் தான் முன்னுரிமை
திரையில்
அவர்கள் அழகிற்கு
அடிமையாவதும்
கோவில் கட்டுவதும் தான்
மிக கொ

மேலும்

என்ன ஒரு சாடல்..! 21-Jun-2014 4:41 pm
அப்பாடியோ .... தீக்குழம்பாய் கக்கிடும் வார்த்தைகள் .... வாழ்த்துக்கள் !! 21-Jun-2014 1:08 pm
சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2014 12:37 pm

காதல் கடன் கேட்டு
காலை மாலையென
காத்திருப்பதும்
சுகம் என்றேன்

என் விழியின் பசிக்கு
விருந்தோம்பல் நீ என்று

அன்றாடம்
பசி தீர்த்தும்
மீண்டும் உனை தேடும்
என் கண்கள்

அறுசுவை உணவு உன் தேகம் என்றால்
ஆடை உண்ட
எச்சம் மட்டுமே
விழியால்
ருசித்தவன் நான்

காதல் கடிதம்
எழுத கவிதையை
தொடுத்தவன்
கசக்கி எறிந்தேன்
குப்பையில்

உன்னிடம்
கடிதம் வந்த
கனம்
இறந்து போகுமோ
உன் ஓரப்பார்வையும்
என்ற மரண பயத்தில்

பெண்ணே
தயவு செய்து
எனை களவு செய்

களவாடிய பொருள்
உன் சொந்தமாகி விடும்

நான் உன் சொந்தமாகவேனும்
அதற்காகவாவது
எனை களவு செய் என்னை

களவிற்கு தண்டனையாய்
முத்தம் பல
தண்

மேலும்

சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2014 11:47 pm

கடவுள் சில நேரம்
என் அருகில் வரும் நேரம்
உணர்கிறேன் நாள் தோறும்
என் என்னவள் அருகில்

கற்பு கரசி யார் என்றாள்
சட்டென கண்ணகி பெயர் சொல்லும்
உலகில் என் கற்பு கரசியின் சிலை
என் என்னவளின் நிழல்

மாதா பிதா குரு தெய்வம்
வாக்கியத்தில் விடுபட்ட வார்த்தை
மனைவி

இறந்து போன மனைவிக்கு
கல்லறை கட்டியதை காதலின் சின்னமாய்
மாற்றிய மனிதர்களுக்கு முன்
என் காதல் சின்னம்
என் மனைவி உலவும் என் வீடு

உலக அழகி என்று
யார் யாரையோ கொண்டாடும் உலகில்
என் அழகி
என் என்னவள்

காதலர் தினம், அன்னையர் தினம்
என எத்தனையோ தினங்கள்
கொண்டாடும் உலகில்
தினம் தினம் கொண்டாடுகிறேன்
மனைவி தின

மேலும்

நல்ல "மனைவி" தினம் தினம் கொண்டாட பட வேடியவர் என்பதாலோ... "மனைவியர் தினம் " என்று ஒன்று தனியாக இல்லை போலும்...!! அருமை..உங்கள் கவிதை..!! 04-Oct-2014 9:34 pm
காதல் அருமை தோழரே. 04-Oct-2014 7:22 pm
அருமை .................. வேறென்ன்ன சொல்ல ! வார்த்தைகள் இல்லை .............. 04-Oct-2014 7:15 pm
அருமை......... 04-Oct-2014 11:28 am
சத்யா - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2014 9:40 pm

புறா வழி வளர்ந்த காதல்
காவியம் ஆனது
முக நூல் வழியே வளரும் காதல்
தன் முகவரியை
இழந்தது
பார்வைக்காய்
உறையாடலுக்காய்
தவித்த காலத்தில்
காதல் கடவுளாய் இருந்தது
முகநூல்
குறும் செய்தி
மின்னஞல்
வழியே
பயணப்பட்டு
காதல் அணு உலையாய்
மாறி போனது
கடந்த காலத்தில்
காதல் வாழ்ந்து
காதலர்கள்
இறந்தார்கள்
இன்று
காதலர்கள் வாழ்கிறார்கள்
உடலையும்
மனதையும்
மாற்றி கொண்டு
ஆனால்
காதல் மட்டும்தான்
அன்றாடம்
செத்து செத்து
வாழ்கிறது
உண்மை
காதலர்களை
தேடி
அலைந்த
படி

மேலும்

:) 22-Jan-2014 12:14 pm
தங்களின் கருத்திற்க்கு மிக்க நன்றி 21-Jan-2014 11:53 pm
உண்மையான வரிகள்..! 21-Jan-2014 11:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (73)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (73)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (73)

a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
user photo

nuskymim

kattankudy
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
மேலே