மரண வாசல்

ஆயிரம் கால
வரலாற்று புகழ் கொண்டதாய்

ஆயிரம் காவியங்களை
தன் கருவில்
சுமந்ததாய்

அகத்தியர் தொடங்கி
இன்றுவரை
பல புலவர்கள்
சுவாசித்த
மூச்சு காற்றாய்
இன்னும்
எத்தனையோ பெருமையுடன்
வீர நடை போட்ட
என் தாய்
மொழி
அன்னிய
ஆதிக்கத்தால்
மெல்ல மெல்ல
இறந்து
இறுதி கட்டத்தை
நெருங்கும் முன்
அனைவரும்
வாரிர்
அன்னை மொழியை
அழிவில் இருந்து மீட்க

அதே போல்
எம் பாரம்பரிய கலையும்
ஜல்லி கட்டு முதலான
வீரவிளையாட்டும்
சில
தமிழ் எதிரிகளால்
சிறுக சிறுக
கொல்ல பட்டு
கடைசி பசியுடன்
கலங்கி நிற்கும்
நிலையில்

நாளை மூட்டை மூட்டையாய்
வாய்க்கரிசி போடுவதை விட
இன்று
உயிர் பசிக்கு
உணவிடுங்கள்

எழுதியவர் : ந.சசிசத்யா (17-Jan-15, 7:33 pm)
Tanglish : marana vaasal
பார்வை : 277

மேலே