காய்ச்சல்
காய்ச்சல்
உடம்பு தனலாய் கொதித்திட
கண்கள் கனலாய் எரிந்திட
தலை பாறையாய் கனத்திட
கைகால்கள் தாமாக நடுங்கிட
உறுப்புக்கள் அனைத்தும் சோர்ந்திட
உமிழ்நீரும் உள்ளே கசந்திட
உள்ளம் உமையாகி அழுதிட
உடனிருந்தோர் மனம் வருந்திட
அறுசுவையும் நாவு மறந்திட
உலகம் ஃப்லூ என பெயரிட
வந்தானே ஆதிக்கத்தை செலுத்திட
வழி இன்றி பணிவோம் வாரம் முழுவதுமே..