பொங்கலோ பொங்கல்
தனி தனி தீவுகளாய்
சிதறி கிடக்கும்
உறவுகளை
ஒன்றாய்
சேர்க்கவும்
நாம் பிறந்த மண்ணோடு
புழுதி பறக்க
ஆடி களிக்கவும்
ஊரில் நடந்து முடிந்த
நிகழ்வுகளை
அசைபோடவும்
பணம் சம்பாதிக்கும்
இயந்திரமாய்
மாறி போன
மனிதனின்
வாழ்வை
மனிதனும்
மண்ணும்
ஆடும்
மாடும்
மரம் செடி கொடிகளும்
நம் முன்னோர்களின்
நினைவுகளை
சுமந்த வீடும்
ஒன்றாய்
கூடி மகிழ
என்றோ
ஒருநாள்
பொங்கல்
திருநாளை
கண்டறிந்த
முன்னோர்கள்
அனைவருக்குமான
நன்றிகளுடன்
கடந்து
செல்கிறோம்
இப்பொங்கல்
திருநாளை