இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி-2015
ஜாதி மதம் பார்க்காதே இதயம் கொண்டிருக்கும் அன்பினை பார் !
கொட்டிக்கிடக்கும் பணத்தை பார்க்காதே
தன்னிடம் பத்து ரூபாய் இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு அளிக்கொடுக்கும் அன்பு மனதை பார் !
பிச்சை எடுத்தாலும் அவன் உண்ணுவது விலை நிலங்களின் விளைந்த பருக்கதைதான் !
நாம் பெரிய உணவகத்தில் அமர்ந்து உண்ணுவதும் அதே பருக்கயைத்தான் !
எவனோ கிழவன் ஒருவன் உழுது போட
நாம் அனைவரும் இங்கு உணவு உண்கிறோம்
அவன் ஜாதியை நினைத்திருந்தால் நமக்கெது மணக்கும் உணவும் பட்டினில் இறப்பதே கடையில் நம் கனவு
காற்றை சுவாசிக்க உயிர் யோசிப்பதில்லை
தண்ணீர் அருந்த உயிர் யோசிப்பதில்லை
ஆடைகள் உடுத்த உடல்கள் யோசிப்பதில்லை
அறுசுவை உணவுண்ண வயிறும் யோசிப்பதில்லை
அனைத்தையும் நேசிக்க அன்பு போதும்
இப்படியும் காதலிக்க குணங்கள் வேணும்