தமிழனே செத்துப்போ
எத்தனையோ பேர் வளர்த்த தமிழ்
நாதியற்று கிடக்கிறது
தமிழ் கலாச்சாரமோ
பாதி பாதியாய்
இறக்கிறது
தமிழை வளர்ப்பதாய்
தம்பட்டம் அடிக்கும்
தலைவர்களின் பிள்ளைகள்
ஆங்கில பள்ளிகளில்
அங்கிலம் அறிந்தவனுக்கே முன்னுரிமை
அலுவலகங்களில்
டீகடையில் முதலாளியாய் அமர
மலையாளிக்கு தெரியும்
அவனிடம் கடன்கேட்க தான்
நமக்கு வரும்
குல்பியோ
பானிபூரியோ
விற்று பிழைக்க
வட மாநிலத்தவனுக்கு புரியும்
சான்றிதழை வைத்துக்கொண்டு
அலையதான் நம்மால் முடியும்
ஆயிரமாயிரம் தேவதைகள் உள்ள
என் மாநிலத்தில்
மும்பைக்கும்,
கேரளத் திற்கும் தான் முன்னுரிமை
திரையில்
அவர்கள் அழகிற்கு
அடிமையாவதும்
கோவில் கட்டுவதும் தான்
மிக கொடுமை
தண்ணீர் தர மறுப்பவனுக்கும்
அணை போட முயல்பவனுக்கும்
மின்சாரத்தை அனுப்புகிறோமா
நிலத்தடி நீரை கொன்று
ஈழ தமிழனோ
இன்னும் பாவம
அரசியல் பசிக்கு மட்டுமே
அவன் சாதம்
ஆறு படை தொடங்கி
அத்தணை தெய்வமும்
நம் மண்ணில்
நாம் போவதோ
பிற மாநிலத்தை தேடி
என் மண்ணில் கிடைப்பதை
அங்கே கொட்டுகிறோம்
காணிக்கையாக
இங்கே எத்தனையோ சாமிகள்
தவிக்கிறது
அம்மணமாக
சொந்த மண் புகழ் காக்க மறந்து
பிறந்தோம்
வளர்ந்தோம்
செத்தோம்
என்று இருப்பதற்கு
நீ இன்றே செத்து போ
நாளைய தலைமுறையாவது
நம் புகழையும்
மொழியையும்
காக்கட்டும்
நீ சாகுமுன் எனை கொல்
நானும்தமிழனே