தேநீராய் தேனாய்

தேன் அருந்துகிறேன்
தெவிட்டுகிறது
தேநீர் அருந்துகிறேன்
சுவையாயினும்
மனம் ஒரு கோப்பை
போதும் என்கிறது
கவிதை அருந்துகிறேன்
அலுக்கவில்லை
கவிதை எழுதுகிறேன்
தெவிட்டவில்லை
தேனாய் தெள்ளமுதாய்
சுவையாய் சுகமாய்
சுகமான ராகமாய் ......
மனம் போதும் என்று
சொல்வதில்லை !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-14, 9:29 am)
பார்வை : 120

மேலே