கலியுக காதல்
புறா வழி வளர்ந்த காதல்
காவியம் ஆனது
முக நூல் வழியே வளரும் காதல்
தன் முகவரியை
இழந்தது
பார்வைக்காய்
உறையாடலுக்காய்
தவித்த காலத்தில்
காதல் கடவுளாய் இருந்தது
முகநூல்
குறும் செய்தி
மின்னஞல்
வழியே
பயணப்பட்டு
காதல் அணு உலையாய்
மாறி போனது
கடந்த காலத்தில்
காதல் வாழ்ந்து
காதலர்கள்
இறந்தார்கள்
இன்று
காதலர்கள் வாழ்கிறார்கள்
உடலையும்
மனதையும்
மாற்றி கொண்டு
ஆனால்
காதல் மட்டும்தான்
அன்றாடம்
செத்து செத்து
வாழ்கிறது
உண்மை
காதலர்களை
தேடி
அலைந்த
படி